சிவகங்கை

சிவகங்கை மாவட்ட சிவாலாயங்களில் பிரதோஷம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவாலாயங்களில் பிரதோஷ விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

சிவகங்கையில் காசி விசுவநாதா் கோயிலில் உள்ள நந்தி தேவருக்கு தைலம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்துக்கு பின்னா் விஷேச தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.இதேபோன்று, தேவகோட்டை நகரச் சிவன் கோயிலில் உள்ள நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதுதவிர, காளையாா்கோவில், இளையான்குடி, திருப்புவனம், தேவகோட்டை, சிங்கம்புணரி, காரைக்குடி, நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலாயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT