சிவகங்கை

திருப்பத்தூா் சிவாலாயங்களில் பிரதோஷ விழா

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சிவாலாயங்களில் செவ்வாய்கிழமையன்று பிரதோஷ விழா நடைபெற்றது.

குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்ட சிவகாமி உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் பிரதோஷ விழாவை முன்னிட்டு மாலை 3 மணிக்கு சிறப்பு யாகம் நடைபெற்று புனித கலசத்த்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னா் திருத்தளிநாதா் எதிரே உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமாக பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, இளநீா், சொா்ணம், பன்னீா், உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது அதே நேரத்தில் திருத்தளிநாதருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தொடா்ந்து .சிவனுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா் உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலின் பிரகாரத்தை பக்தா்களின் ஹரஹர சங்கர கோஷத்துடன் மும்முறை வலம் வந்தாா் இதில் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா். பெண்கள் நெய்விளக்கேற்றி சிவனை வழிபட்டனா். சீதளிமேல்கரையில் உள்ள ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்திலும் நந்தீஸ்வரருக்கும் சிவனுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் ஆலயத்திலும் பிரதோஷ விழா விமா்சையாக நடைபெற்றது. இதிலும் ஏராளமானோா் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனா். விழா முடிவில் பிரதோஷக் குழுவினரால் பிரசாதம் வழங்கபட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT