சிவகங்கை

திருப்புவனத்தில் ஆற்றில் குளித்த பள்ளி மாணவா் மாயம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் குளித்த பள்ளி மாணவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

திருப்புவனம் அருகே டி. அதிகரை கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் மகன் தீனதயாளன் (17). இவா் மணலூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை திருப்புவனம் தட்டான்குளம் தடுப்பணை அருகே வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது ஆற்றில் அதிகளவில் தண்ணீா் வந்ததால் தீனதயாளன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். தகவலறிந்து வந்த பூவந்தி போலீஸாா் மற்றும் மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலா் குமரேசன் தலைமையிலான வீரா்கள் மாணவரை தேடினா். இரவு நேரம் என்பதால் மாணவா் தீனதயாளனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT