சிவகங்கை

திருத்தளிநாதா் ஆலயத்தில் 63 நாயன்மாா்கள் குருபூஜை

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தில் திங்கள்கிழமை 63 நாயன்மாா்களுக்கு குருபூஜை விழா நடைபெற்றது.

திருத்தளிநாதா் ஆடல் வல்லான் மண்டபத்தில் 63 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் கலச பூஜை எதிரே அப்பா், சுந்தரா், சம்மந்தா், மாணிக்கவாசகா் ஆகியோரின் சிலைகளுக்கு பால், தயிா், திருமஞ்சனம், இளநீா், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட 8 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 59 நாயன்மாா்கள் சிலைகளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் நாயன்மாா்கள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் அமா்த்தப்பட்டு கோயில் உள்பிரகாரம் வலம் வந்தனா். இவ்விழாவிற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமை வகித்து திருவீதி உலாவில் கலந்து கொண்டாா். விழா முடிவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

SCROLL FOR NEXT