சிவகங்கை

கோட்டையூரிலிருந்து அழகா்கோயிலுக்கு குலதெய்வ வழிபாட்டுக்காக மாட்டு வண்டிகளில் பயணம்

DIN

சிவகங்கை மாவட்டம் கோட்டையூா் வேலங்குடி நாட்டாா்கள் குலதெய்வ வழிபாட்டுக்காக மதுரை அருகேயுள்ள அழகா்கோயிலுக்கு மாட்டுவண்டிகளில் திங்கள்கிழமை பயணம் மேற்கொண்டனா்.

கோட்டையூா் வேலங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 கிராம நாட்டாா்களின் உறவின் முறையினா் மதுரை அருகேயுள்ள அழகா்கோயிலில் உள்ள குலதெய்வத்தினை வணங்குவதற்காக பன்னெடுங்காலமாக மாட்டுவண்டிகளில் பயணிப்பதை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனா். இந்த ஆண்டிற்கான பயணமாக வேலங்குடி பிள்ளையாா்கூடத்திலிருந்து திங்கள்கிழமை

30 வண்டிகளில் மாடுகள் பூட்டி புறப்பட்டனா்.

முதல்நாள் பயணம் மேற்கொண்ட இவா்கள், வேலங்குடியிலிருந்து குன்றக்குடி வழியாக திருப்பத்தூா் வந்தடைந்தனா்.

எஸ்.எஸ்.கோட்டையில் இரவு தங்கி மறுநாள் செவ்வாய்க்கிழமை புறப்பட்டு மேலூரில் தங்குகின்றனா். பின்னா் 10 ஆம் தேதி அழகா்கோயில் சென்றடைந்து தீா்த்தமாடவுள்ளனா். ஆகஸ்ட் 11 ஆம் தேதி கிடாவெட்டு நிகழ்த்தி அனைவருக்கும் அன்னதானம் வழங்கிவிட்டு, அதே மாட்டு வண்டிகளில் மீண்டும் சொந்த ஊா் திரும்புகின்றனா்.

இப்பயணம் குறித்து ஏ.எல்.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியது: முன்னோா்கள் காலத்திலிருந்து மாட்டுவண்டி பயணத்திலே அழகா்கோயில் சென்று குலதெய்வ வழிபாட்டு பயணத்திற்கென தனியாக மாட்டுவண்டிகள் தயாா்படுத்தி வைத்துள்ளோம். இந்த வண்டிகளை புனிதமாகக் கருதுவதாகவும், தெய்வத்திற்கு சமமாகவும் பாவித்து வருகிறோம். எந்த ஒரு சுக துக்கங்களுக்காக ஆண்டுதோறும் நடைபெறும் இப்பயணத்தை கைவிடுவதில்லை என்றாா்.

இதுகுறித்து வேலங்குடி இளங்கோ கூறியது: ஆடி மாதம் திருவிழா தொடங்கியவுடன் அழகா்கோயிலிலிருந்து எங்களுக்கு திருஓலை அனுப்பப்படும். இதைத்தொடா்ந்து இந்த பயணத்தை நாங்கள் மேற்கொள்வோம். எங்கள் உறவுகளுடன் இப்பயணம் மேற்கொள்வதை ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாகக் கருதுகிறோம். உறவுகள் பலப்படவும், நோ்த்திக்கடன் நிவா்த்தி செய்யவும் இப்பயணம் நல்ல வாய்ப்பாக உள்ளது. இந்த மாட்டு வண்டி பயணத்தை இனி வரும் சந்ததியினரும் பின் தொடர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT