சிவகங்கை

மானாமதுரை ஆடித்தபசு திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் ரதத்தில் பவனி 

9th Aug 2022 01:50 PM

ADVERTISEMENT

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவில் திங்கள்கிழமை மாலை ஆனந்தவல்லி அம்மன் ரதத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது. 

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மன் வெவ்வேறு வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து, பின்னர் வீதிகளில் உலா வருதல் நடைபெற்று வருகிறது. 

இதையும் படிக்க: மானாமதுரை வீர அழகர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற ரத உற்சவத்தை முன்னிட்டு, ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரத்தில் கோயிலுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ரதத்துக்கு எழுந்தருளினார். 

ADVERTISEMENT

அதன் பின்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்று முடிந்து ரதம் புறப்பாடு நடைபெற்றது. கோயிலை சுற்றி உள்ள வீதிகளில் ரதம் பவனி வந்தபோது, மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு ரதத்தை வரவேற்று, ஆனந்தவல்லி அம்மனுக்கு பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். 

இதையும் படிக்க: மொஹரம் பண்டிகை: ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

ரதம் நிலை சேர்ந்ததும் தீபாராதனைகள் நடைபெற்று, ஆனந்தவல்லி அம்மன் கோயிலுக்குள் சென்றடைந்தார். அதன் பின்னர் இரவு ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT