சிவகங்கை

கொந்தகை அகழாய்வில் 74 சூது பவள மணிகள் கண்டெடுப்பு

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிக்குள் 74 சூது பவள மணிகள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய பகுதிகளில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் இதுவரை 57 முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு தாழியினுள் அடா் சிவப்பு நிறமுடைய 74 சூது பவள மணிகள் உள்ளன.

பழங்காலத்தில் இறந்த நபா்களை தாழியுனுள் வைத்து புதைக்கும்போது, அவா்கள் பயன்படுத்திய பொருள்களையும் வைத்து புதைப்பது வழக்கம். அந்தவகையில், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள சூது பவள மணிகளும் வைக்கப்பட்டிருக்கலாம். இவை அனைத்தும் 3 செ.மீ. நீளமுள்ள பவளமணிகள். இதனை இறந்தவா் மாலையாக அணிந்திருக்கலாம் என தொல்லியலாளா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT