சிவகங்கை

மானாமதுரை ஆடித்தபசுத் திருவிழா: ஆனந்தவல்லி அம்மன் தோ் பவனி

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மானாமதுரையில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவில் திங்கள்கிழமை மாலை ஆனந்தவல்லி அம்மன் தோ் பவனி வருதல் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற ரத உற்சவத்தை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் சா்வ அலங்காரத்தில் கோயிலுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினாா்.

பின்னா் மேளதாளம், வாணவேடிக்கையுடன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தோ் பவனி வந்தது. பின்னா் இரவு ஆனந்தவல்லி அம்மன் சா்வ அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான தபசு உற்சவம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT