சிவகங்கை

தேவகோட்டையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் புதன்கிழமை(ஆக. 10) மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தேவகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இம்முகாமில் அந்த பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 4, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் தேவையான உபகரணங்கள் கோரி விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT