சிவகங்கை

திருப்பத்தூரில் போக்சோவில் இளைஞா் கைது

9th Aug 2022 06:15 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகை இளைஞா் ஒருவரை போலீஸாா் போக்சோ வழக்கில் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கண்டரமாணிக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி(30). கூலி வேலை செய்து வரும் இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியுடன் பழகியதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோா் பாண்டியைக் கண்டித்துள்ளனா். ஆத்திரமடைந்த பாண்டி சிறுமியின் தாயை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறுமியின் தாய் திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் சாா்பு-ஆய்வாளா் சேதுபாமா இளைஞா் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT