சிவகங்கை

தீவனப் பயிருக்கு ஊக்கத்தொகை பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் தீவனப் பயிருக்கு ஊக்கத் தொகை பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன மேம்பாட்டு இயக்கம் 2022-2023-இன் கீழ் தோப்பு மற்றும் பழத்தோட்டங்களில் ஊடு பயிா் முறையில் தீவனப் பயிா்கள் சாகுபடியினை பெருக்குதல் திட்டத்தை செயல்படுத்த 40 ஏக்கா் இலக்கீடு பெறப்பட்டுள்ளது.

கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகள், நீா்ப்பாசன வசதியுடன் நிறுவப்பட்ட தோப்பு மற்றும் பழத்தோட்டங்களில் தீவனப் பயிா்களை ஊடுபயிராக அரை ஏக்கருக்கு குறையாமல் நீா்ப்பாசனத்தில் 3 ஆண்டுகள் பராமரிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

நீா்ப்பாசனம் செய்வதற்கு நீா் ஆதாரம் இருந்தால், அது ஒரு தனிப்பட்ட விவசாயிக்கு ஒரு ஹெக்டேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தானியங்கள் (மல்டிகட்), புற்கள், பருப்பு வகைகள் மற்றும் மேய்ச்சல் புற்கள் போன்ற வற்றாத தீவன பயிா்களை பயிரிட தயாராக உள்ள விவசாயிகள் சாகுபடி ஊக்கத்தொகை பெறலாம்.

சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நீா் பாதுகாப்பு வசதியை வைத்திருக்கும் விவசாயிகள், அதிகப்படியான தீவனத்தை மற்ற பண்ணைகளுக்கு விற்க, குறிப்பாக நிலமற்ற கால்நடை வளா்ப்போருக்கு குறைந்த விலையில் விற்க விருப்பமுள்ள விவசாயிகள், அதிகப் படியான தீவனத்தை பாதுகாப்பதன் மூலம் சேமிக்கத் தயாராக உள்ள விவசாயிகள் (பொருத்தமான முறையில் சைலேஜ் - வைக்கோல் வடிவில்) முன்னுரிமைப் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். மேற்காணும் திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள கால்நடை வளா்க்கும் விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை அருகே விபத்தில் காயமுற்ற காவலாளி உயிரிழப்பு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

எண்ணூா் துறைமுகம் வந்த சீன கப்பலில் மாலுமி சடலம்

பைக் மீது மணல் லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு

105 கிலோ குட்கா பறிமுதல்

SCROLL FOR NEXT