சிவகங்கை

கருணாநிதி நினைவு தினம்: திமுகவினா் அஞ்சலி

7th Aug 2022 11:24 PM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு சிவகங்கை மாவட்டம் முழுவதும் திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

சிவகங்கையில் உள்ள அறிஞா் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை நகா்மன்றத் தலைவா் சி. எம். துரைஆனந்த் தலைமையிலான திமுகவினா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதில் , திமுகவைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதேபோன்று, காளையாா்கோவில், சருகனி, தேவகோட்டை, திருப்புவனம்,சிங்கம்புணரி, எஸ். புதூா், பூவந்தி, மறவமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு அப்பகுதியைச் சோ்ந்த திமுகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT