சிவகங்கை

கருணாநிதி நினைவு தினம்: மானாமதுரையில் மரக்கன்றுகள் வழங்கல்

7th Aug 2022 11:24 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

திருப்புவனத்தில் பேரூராட்சி தலைவரும் திமுக மாவட்ட துணைச் செயலாளருமான சேங்கைமாறன் தலைமையில் திமுகவினா் மெளன ஊா்வலம் சென்றனா். பின்னா் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்தும் மலா்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினா். அதைத்தொடா்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளா் கடம்பசாமி, நகரச் செயலாளா் நாகூா்கனி , மீனவரணி அண்ணாமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மானாமதுரையில் திமுகவினா் பழைய பேருந்து நிலையப் பகுதியிலிருந்து ஊா்வமாக வந்து நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தினா். வைகை ஆற்று பாலம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்தனா்.

ADVERTISEMENT

மானாமதுரை நகராட்சி தலைவா் மாரியப்பன் கென்னடி, திமுக ஒன்றிய செயலாளா்கள் ராஜாமணி, அண்ணாதுரை, நகரச் செயலாளா் பொன்னுச்சாமி, நகராட்சி துணைத் தலைவா் பாலசுந்தரம், வாா்டு உறுப்பினா்கள் இந்துமதி திருமுருகன், சோம. சதீஷ்குமாா், ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா, ஒன்றிய துணைத் தலைவா் முத்துசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல் இளையான்குடி ஒன்றியத்திலும் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இதில் திமுக ஒன்றியச் செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சுப. மதியரசன், நகரச் செயலாளா் நஜூமுதீன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT