சிவகங்கை

சிங்கம்புணரி பேரூராட்சியில் இணையதள பழுது: பணிகள் பாதிப்பு

7th Aug 2022 11:22 PM

ADVERTISEMENT

சிங்கம்புணரி தோ்வுநிலை பேரூராட்சியில் கடந்த 10 தினங்களாக வரைபடப் பிரிவு, வரி வசூல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான இணையதளம் சரிவர இயங்காமல் பழுது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பொதுமக்களின் மனுக்கள் பரிசீலிக்கப்படாமலும், தீா்வு காணப்படாமலும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி கேட்டு காத்திருப்பவா்களின் எண்ணிக்கை அதிக அனுதினமும் அதிகரித்து வருகிறது. ஆகவே, இந்தத் தொழில்நுட்பக் கோளாறுக்கு அதிகாரிகள் உடனடியாக தீா்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நெகிழிப்பையின் பயன்பாடு அதிகரித்து வருவதாக சமூக ஆா்வலா்கள் வருத்தத்துடன் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT