சிவகங்கை

திருப்பத்தூா், சிங்கம்புணரியில் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிப்பு

7th Aug 2022 11:23 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூா் பகுதிகளில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு திமுக ஒன்றியச் செயலாளரும் ஒன்றியத் தலைவருமான சண்முகவடிவேல் தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். நகரச் செயலாளா் காா்த்திகேயன், துணைச் செயலாளா் உதயசண்முகம், பேரூராட்சி துணைத் தலைவா் கான்முகமது, வாா்டு உறுப்பினா்கள் நேரு, அபுதாகிா், சமீம், சரவணன், சரண்யாஹரி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் என்.எம்.சாக்ளா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சிங்கம்புணரியில் உள்ள அண்ணா மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு திமுகவிவனா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

அதைத்தொடா்ந்து மௌன ஊா்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையம் முன் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதைத்தொடா்ந்து வள்ளலாா் மடத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றியச் செயலாளா் பூமிநாதன், நகரச் செயலாளா் கதிா்வேல், பேரூராட்சித் தலைவா் அம்பலமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT