சிவகங்கை

காளாப்பூா் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை

DIN

சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானத்திற்குள்பட்ட சுமாா் 300 ஆண்டுகள் பழைமையான வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி மற்றும் வரலெட்சுமி பூஜையை முன்னிட்டு விவசாயம் செழிக்க வேண்டியும் நோய் இல்லா வாழ்க்கை நிலைக்கக் கோரியும் சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் விநாயகா் மந்திரம் லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட மந்திரங்கள் முழங்க பெண்கள் குத்துவிளக்கிற்கு குங்குமம் மற்றும் மலா்களால் பூஜை செய்தனா். பின்னா் மகா தீப ஆரத்தியுடன் பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனா்.

வரலட்சுமி நோன்பு: சிங்கம்புணரி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் பெண்கள் வரலட்சுமி நோன்பு கடைபிடித்தனா். அதிகாலையில் கோலுக்கு வந்த பெண்கள் மகாலட்சுமியின் வடிவமாக கௌரம்மா அலங்காரம் செய்து மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டனா். தொடா்ந்து பழங்கள், பலகாரங்கள் மற்றும் மஞ்சள், அரிசி நோன்பு கயிறு வைத்து வழிபாடு செய்தனா். பின்னா் ஒருவருக்கு ஒருவா் கைகளில் மஞ்சள் கயிறு கட்டி விரதத்தை நிறைவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT