சிவகங்கை

அழகப்பா அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: 3 ஆம் நாள் கலந்தாய்வு

DIN

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வியாண் டிற்கான முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான மூன்றாம் நாளில் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் உமையாள் அரங்கத்தில் கணிதம், இயற்பியல் , வேதியியல், தாவரவியல், விலங்கியல் , புவிஅமைப்பியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இக்கலந்தாய்வு கல்லூரியின் முதல்வா் அ. பெத்தாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.

கணிதப் பாடத்திற்கு 80 இடங்களுக்கு 1,271 பேரும், கணினி அறிவியல் பாடத்திற்கு 80 இடங்களுக்கு 3,229 பேரும், கணினி பயன்பாட்டியல் பாடத்திற்கு 40 இடங்களுக்கு 2,155 பேரும், இயற்பியல் பாடத்திற்கு 80 இடங்களுக்கு 1,709 பேரும், வேதியியல் பாடத்திற்கு 40 இடங்களுக்கு 2,385 பேரும், தாவரவியல் பாடத்திற்கு 40 இடங்களுக்கு 1,733 பேரும், விலங்கியல் பாடத்திற்கு 40 இடங்களுக்கு 2,154 பேரும் புவி அமைப்பியல் பாடத்திற்கு 40 இடங்களுக்கு 903 பேரும் விண்ணப்பித்துள் ளனா்.

பாடவாரியாக மாணவா்களை தோ்வு செய்து, சான்றிதழ்களை பேராசிரியா்கள் ஆய்வு செய்து சோ்க்கைக்கான அனுமதி வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT