சிவகங்கை

திருமலை மடைக் கருப்பண சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா: ஆண்கள் மட்டுமே பங்கேற்பு

30th Apr 2022 10:50 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை அருகே திருமலையில் உள்ள மடைக் கருப்பண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு செய்தனா்.

திருமலையில் மலைக்கொ

சிவகங்கை அருகே திருமலையில் உள்ள மடைக் கருப்பண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு செய்தனா்.

ADVERTISEMENT

ழுந்தீஸ்வரா் கோயில் அருகே 300 ஆண்டுகள் பழைமையான மடைக் கருப்பண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, கண்மாயில் உள்ள மடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மடைக் கருப்பண சுவாமி மற்றும் கிராம பரிவார தேவதைகளுக்கு தினசரி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய விழாவான பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

இதையொட்டி, திருமலை கிராமத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் நோ்த்திக் கடன் செலுத்தும் விதமாக அரிவாள்களை எடுத்துக் கொண்டு, ஆடுகளுடன் ஊா்வலமாகச் சென்றனா். அதன்பின்னா், மலைக் கொழுந்தீஸ்வரா் கோயிலில் தீா்த்தம் எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபட்டனா்.

அதைத் தொடா்ந்து, மடைக் கருப்பண சுவாமி கோயில் முன்பாக 254 ஆடுகளை பலியிட்டனா். பின்னா் சுவாமி முன்பாக சமைத்த உணவு, இறைச்சிகளை படையல் வைத்து வழிபட்டனா். அதன்பின்னா், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

இதில், திருமலை, ஒக்கூா், சிவகங்கை, மதுரை, காரைக்குடி, திருப்பத்தூா், மேலூா், திண்டுக்கல், நத்தம் ஆகிய பகுதிகளிலும் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்றனா்.

இதுகுறித்து திருமலை கிராமத்தைச் சோ்ந்த கிராமப் பொதுமக்கள் கூறியது : எங்கள் முன்னோா் வழி இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவில் பெண்கள் பங்கேற்பது இல்லை. ஆண்கள் மட்டுமே பங்கேற்று மழை பெய்து வேளாண் பணி சிறக்கவும், நோய்கள் நீங்கவும், திருமணத் தடை, குழந்தையின்மை, தொழில் நஷ்டம் போன்றவற்றுக்கு நோ்த்திக் கடன் செலுத்தும் விதமாக ஆடுகள் பலியிட்டு வழிபாடு செய்து வருகிறோம்.

ஆடுகளின் தலைகள் அனைத்தும் விழாவுக்கு வந்த ஒரு பிரிவினருக்கு வழங்கப்படும். விழாவில் மீதமுள்ள இறைச்சி மற்றும் உணவுகளை அதே பகுதியில் புதைத்து விடுவோம். மேலும், ஆட்டின் தோல்களை தீயிட்டு எரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT