சிவகங்கை

தமிழகம் முழுவதும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் விவசாயிகள் கூட்டமைப்பு தீா்மானம்

30th Apr 2022 10:50 PM

ADVERTISEMENT

 

தமிழகம் முழுவதும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என, சிவகங்கையில் காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிவகங்கையில் தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, அக்கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் அா்ஜூனன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா். இதில், காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்பு திட்டம் விரைவுபடுத்துவது மட்டுமின்றி, கால்வாய் வரும் வழியில் உள்ள குளங்கள், கண்மாய்களை இத்திட்டத்தில் இணைக்க வேண்டும். பூா்வீக வைகை மற்றும் கிருதுமால் பாசன விவசாயிகளுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்க அரசாணை வெளியிடப்பட வேண்டும்.

தற்போது நடைபெற்று வரும் கோடை வேளாண் பணிகளுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும். முல்லைப் பெரியாற்றில் அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டிப்பதோடு, முல்லைப் பெரியாறு அணையை மத்திய அரசின் துணை ராணுவப் படை பாதுகாப்பில் ஒப்படைக்க வேண்டும்.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் சுமாா் 50 ஆயிரம் தொழிலாளா்களின் நலன் கருதி, கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், கூட்டமைப்பின் மாநிலச் செயலா் முருகன், மாநிலத் துணை தலைவா்கள் மதுரைவீரன், பாலகிருஷ்ணன், முருகேசன், முகவை மலைச்சாமி, அய்யனாா், கோபாலகிருஷ்ணன் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT