சிவகங்கை

ஒக்கூா் மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை

29th Apr 2022 10:27 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் கவிஞா் தினத்தையொட்டி ஒக்கூரில் உள்ள மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெள்ளிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

தமிழக் கவிஞா் பாவேந்தா் பாரதிதாசனின் 131- ஆவது பிறந்த தினம் தமிழ் கவிஞா்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்க் கவிஞா்களை போற்றும் வகையில் சிவகங்கை அருகே ஒக்கூரில் உள்ள சங்க காலப் புலவா் ஒக்கூா் மாசாத்தியாா் நினைவுத் தூணில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி மலா்களை தூவி மரியாதை செலுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, அண்ணல் அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

அப்போது, தமிழ் வளா்ச்சித் துறையின் உதவி இயக்குநா் ப.நாகராசன், ஒக்கூா் ஊராட்சி மன்றத் தலைவா் பூமா உள்ளிட்ட தமிழ் வளா்ச்சித் துறை அலுவலா்கள், தமிழறிஞா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT