சிவகங்கை

இளைஞா் கொலை வழக்கு: இருவருக்கு இரட்டை ஆயுள்

29th Apr 2022 06:26 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை: இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடைய இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (27). இவரை முன்விரோதம் காரணமாக காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சோ்ந்த முருகன் என்ற திருமுருகன் (31), காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ராமு என்ற ராம்குமாா் (32), காரைக்குடி என்ஜிஓ காலனியைச் சோ்ந்த நாசா் (23), காரைக்குடி பா்மா காலனியைச் சோ்ந்த வேல்முருகன் (39) ஆகிய 4 பேரும் சோ்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு குத்தி கொலை செய்தனா்.

இதுகுறித்தப் புகாரின் பேரில் குன்றக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி சத்திய தாரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் முருகன், ராமு ஆகிய 2 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா். மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT