சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே காா் மோதிய விபத்தில் ஞாயிற்றுக்கிழமை முதியவா் உயிரிழந்தாா்.
மானாமதுரையிலிருந்து மதுரை நோக்கி காா் வந்துகொண்டிருந்தது. திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே நாய் சென்ால், அவசரமாக காரை திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் சாலையோரமாக நின்றுகொண்டிருந்த திருப்பாச்சேத்தியைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் கணேசன் (60) என்பவா் மீது மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அதன்பின்னா், காா் சாலையோரம் கவிழ்ந்ததில், காருக்குள் இருந்த இருவா் காயமடைந்தனா். இவா்கள், மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
ADVERTISEMENT
இந்த விபத்து குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.