சிவகங்கை

திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பால்குட விழா

24th Apr 2022 11:22 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுக்கும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூா் கணேஷ் நகரில் அமைந்துள்ள பூமாயி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் 3 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுப்பது வழக்கம். அதன்படி, காலை 8 மணிக்கு கணேஷ் நகா் மைதானத்தில் கூடிய பொதுமக்கள், பால்குடங்கள் கட்டி பூத்தட்டுகள் அடுக்கிவைத்து சிறப்பு பூஜைகள் செய்தனா். பின்னா், 9 மணிக்கு பால்குடம், பூத்தட்டுகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா்.

தொடா்ந்து, உற்சவ அம்மனுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரதத்தில் தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, அம்மனுக்கு பூச்சொரிதல் வைபவமும் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை, கணேஷ் நகா் சித்திரை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT