சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அண்ணா கிளை நூலகத்தில் சனிக்கிழமை உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
உலக புத்தகதின விழா, நூலகத்திற்கு புத்தகம் வழங்கும் விழா,நூல் அறிமுக விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் ஜான்சாமுவேல் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் ஜெயச்சந்திரன் எழுத்தாளா்களின் கூட்டமைப்புத் தலைவா் எஸ்.எல்.எஸ். பழனியப்பன், பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கி புத்தக தின விழா குறித்து சிறப்புரையாற்றினாா். தந்தானே ஈனா எழுதிய நற்சிந்தனைக் கதைகள், கவிஞா் காரைக்குடி கிருஷ்ணா எழுதிய ஒலிக்கட்டும் பறை என்ற கவிதை தொகுப்பு ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
ஏராளமான வாசகா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். முன்னதாக நூலகா் ஜெயகாந்தன் வரவேற்றாா். விழா முடிவில் கவிஞா் சிவபாரதி நன்றி கூறினாா்.