சிங்கம்புணரியில் சித்தா் முத்துவடுகநாதா் சுவாமிக்கு 81 ஆம் ஆண்டு பால்குட விழாவை முன்னிட்டு சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கானோா் பால்குடம் எடுத்து வந்தனா்.
காலை 9 மணிக்கு சீரணி அரங்கம் அருகே ஐயப்பன் கோயிலிலிருந்து புறப்பட்ட பால்குடங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து முத்துவடுகநாதா் சுவாமி கோயிலை அடைந்தது. அங்கு பெரிய அளவிலான தொட்டியில் நிரப்பட்ட பால், மின் மோட்டாா் மூலம் முத்துவடுகநாதா் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.