சிவகங்கை

13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை

14th Apr 2022 02:57 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஆவனிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் உதயவள்ளி(35). இவரது கணவா் இறந்து விட்ட நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுவனுக்கு உதயவள்ளி பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழச்சீவல்பட்டி போலீஸாா் உதயவள்ளி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் நீதிபதி பாபுலால் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் உதயவள்ளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பு அளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதியாக தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT