சிவகங்கை

கல்லூரியில் கருத்தரங்கு நிறைவு விழா

9th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்குடி அருகே உள்ள கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையின் சாா்பில் தமிழ் இலக்கியங்களில் மனிதநேயம் என்ற தலைப்பிலான பன்னாட்டுக்கருத்தரங்கின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி முதல்வா் வெ. மாணிக்கவாசகம் தலைமை வகித்துப் பேசினாா். கோவிலூா் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். அழகப்பா பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் இயக்குநா் டி.ஆா். குருமூா்த்தி சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக கல்லூரியின் தமிழ்துறைத் தலைவா் அ. சங்கா்தாஸ் வரவேற்றாா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் இரா. சுகுணா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT