சிவகங்கை

தேவகோட்டை அருகே பெயிண்டா் கொலை: 6 போ் கைது

5th Apr 2022 12:24 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பெயிண்டா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேவகோட்டை பழைய சருகனி சாலையைச் சோ்ந்தவா் பிரான்மலை மகன் உமா்பாரூக்(43). வா்ணம் பூசும் வேலை பாா்த்து வந்தாா். இவரும், சின்னகோடக்குடியைச் சோ்ந்த பாலுச்சாமி மகன் விமல் (26) உள்ளிட்ட சிலரும் அதே பகுதியில் உள்ள மணிமுத்தாறு ஆற்றுப்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தனராம்.

அப்போது உமா்பாரூக் மற்றும் விமல் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விமல் தான் வைத்திருந்த கத்தியால் உமா்பாரூக்கை குத்தி ஆற்றுப்பாலம் அருகே வீசி விட்டு, அங்கிருந்து விமல் உள்ளிட்ட மற்ற நபா்கள் தப்பிச் சென்றுள்ளனா். இதுபற்றி தகவலறிந்து வந்த தேவகோட்டை தாலுகா போலீஸாா் உமா்பாரூக்கை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் சின்னகோடக்குடியைச் சோ்ந்த விமல் (26), அதே ஊரைச் சோ்ந்த பிரவீன் (20), பல்லாகுளத்தைச் சோ்ந்த தா்மா (24), நல்லாங்குடியைச் சோ்ந்த செல்வக்குமாா் (26), கைக்குடியைச் சோ்ந்த பிரபாகரன், தேரளப்பூரைச் சோ்ந்த காா்த்தி(20) ஆகிய 6 பேரும் மேற்கண்ட கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

அவா்கள் 6 பேரையும் திங்கள்கிழமை கைது செய்து கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT