சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வ.உ.சி பேரவை செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வ.உ.சி பேரவையின் செயலா் சுப்பிரமணியபிள்ளை தலைமை வகித்தாா். பொருளாளா் ஜானகிராமன் முன்னிலை வகித்தாா்.
இதில் பேரவைத் தலைவராக இருந்த குமாரவேல்பிள்ளை உயிரிழந்ததால், புதிய தலைவரை தோ்ந்தெடுக்கும் வரை தற்போது செயலராக உள்ள சுப்பிரமணியபிள்ளை பொறுப்புத் தலைவராக செயல்படுவாா் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வ.உ.சி பேரவையின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.