சிவகங்கை

திருப்பத்தூா் பேரூராட்சிக் கடைகளில் 12 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

2nd Apr 2022 01:22 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட கடைகளில் 12 கிலோ நெகிழிப் பைகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருப்பத்தூா் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் நெகிழிப் பைகள் மற்றும் 14 வகை நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிா என பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் அபுபக்கா் மற்றும் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிவக்குமாா், சுகாதார ஆய்வாளா் சகாயஜெரால்டுராஜ், சுகாதாரப்பணிகள் அலுவலக அலுவலா் சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளா்கள் வைரவன், சோலை, ஹரிஹரன், பாஹிா், சுதன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் கவிதா, மோகன் அடங்கிய குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் மற்றும் உணவு கட்டும் ஷீட்டுகள் சுமாா் 12 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு கடையின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து இனிவரும் காலங்களில் நெகிழப் பைகளோ, நெகிழிப் பொருள்களோ பயன்படுத்தினால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT