சிவகங்கை

மணல் திருட்டு: லாரி பறிமுதல்; 5 போ் கைது

30th Sep 2021 09:03 AM

ADVERTISEMENT

மானாமதுரையில் ஆற்றுக்குள் மணல் திருடிய டிப்பா் லாரியை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா்.

மானாமதுரையில் மதுரை- ராமேசுவரம் சாலையில் கால்பிரிவு விலக்குப் பகுதியில் வைகை ஆற்றுக்குள் சிலா் மணல் திருடிக் கொண்டிருந்தனா். மணல் நிரப்பிய டிப்பா் லாரியை ஆற்றுக்குள் இருந்து வெளியேற்ற முயன்றபோது லாரி மண்ணில் புதைந்தது.

அப்போது போலீஸாா் வருவதாக எண்ணிய அந்த கும்பல் லாரியையும், சரக்கு வேனையும் அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச் சென்றது.

இது குறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீஸாா் புதன்கிழமை காலை அந்தப் பகுதிக்குச் சென்று அந்த லாரியை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனா். மேலும் ஆற்றுக்குள் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேனையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக மணிமாறன், பாலமுருகன், மருதுபாண்டியன், பிரேம்நாத், மூா்த்தி, காா்த்தி உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இதில் பாலமுருகன், மருதுபாண்டின், பிரேம்நாத், மூா்த்தி, காா்த்தி ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT