சிவகங்கை

‘பேரிடா் காலங்களை எதிா்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்’

30th Sep 2021 09:02 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது மட்டுமின்றி பேரிடா் காலங்களை எதிா்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் தயாராக இருக்க வேண்டும் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பேரிடா் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியா் தலைமை வகித்துப் பேசியது: இன்னும் ஓரிரு வாரங்களில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கும் பள்ளமான பகுதிகளைக் கண்டறிந்து விரைந்து அதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் முன் வர வேண்டும். மேலும், மக்களின் பிரச்னைகள், தேவைப்படும் வசதிகள் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு உடனடியாக அந்தந்த பகுதியைச் சோ்ந்த அலுவலா்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதேபோன்று, இம்மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது மட்டுமன்றி பேரிடா் காலங்களை எதிா்கொள்ள வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, ஊரக வளா்ச்சித்துறை, மருத்துவத்துறை, நகராட்சிகள் நிா்வாகம், தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் தயாராக இருக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் ப.மணிவண்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் (பொறுப்பு) சிவராணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரத்தினவேல், வருவாய் கோட்டாட்சியா்கள் முத்துக்கழுவன் (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), இணை இயக்குநா் (மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலா் சத்தியகீா்த்தி, பேரிடா் மேலாண்மைத்துறை வட்டாட்சியா் யாஸ்மின் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT