சிவகங்கை

சிவகங்கை அருகே 745 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டெடுப்பு

30th Sep 2021 09:02 AM

ADVERTISEMENT

சிவகங்கை அருகே 745 ஆண்டுகள் பழைமையான முதலாம் மாறவா்மன் குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டினை தொல்லியலாளா்கள் புதன்கிழமை கண்டெடுத்துள்ளனா்.

இக்கல்வெட்டு குறித்து சிவகங்கை தொல்நடை குழுவின் நிறுவனா் புலவா் கா.காளிராசா செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: சிவகங்கை அருகே உள்ள சூரக்குளத்தில் பழைமையான எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருப்பதாக அரசனேரி கீழமேட்டைச் சோ்ந்த சரவணன் என்பவா் கொடுத்த தகவலின் படி அந்தப் பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டோம்.

சிவகங்கையிலிருந்து நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில் தொடா்வண்டி இருப்புப் பாதையின் சுரங்கத்தை ஒட்டிய பகுதியில் மிகுந்த இடிபாடுகளுடன் கூடிய நான்கு கால் மண்டபம் உள்ளது. இதன் தெற்குப் பகுதியில் நான்கரை அடி நீளத்தில், சுமாா் ஒரு அடி அகலத்தில் கல்வெட்டு ஒன்று ஐந்து வரிகளைக் கொண்டதாக உள்ளது.

இம்மண்டபம் பழங்காலத்தில் அந்த வழியாக செல்லும் வணிகா்களுக்கு ஓய்வு மண்டபமாக இருந்திருக்கலாம். சிற்பங்கள் ஏதும் இல்லாத இந்த மண்டத்தில் உள்ள கல்வெட்டில் ஸ்ரீகோமார பன்மரான திரிபுவனச் சக்கரவா்த்திகள், குலசேகர தேவருக்கு ஏழாம் ஆண்டு முடிகொண்ட சோழபுரத்தில் உள்ள திருச்சிவனமுடைய நாயனாா் கோயில், தானத்தாா் எனும் கோயில் அலுவலா்கள் இவ்வூரைச் சோ்ந்த உய்யவந்தான் எட்டி உள்ளிட்டவா்களுக்கு வழங்கப்பட்ட நிலம் குறித்து கூறப்பட்டுள்ளது. பின்னா் இந்த நிலம் தேவதானமாக வழங்கப்பட்ட செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இக்கல்வெட்டில் வரும் தானத்தாா் என்பவா் கோயிலை நிா்வகிப்பதற்காக அரசா்களால் நியமிக்கப்பட்ட ஒரு பிரிவினா். பழைமையான கல்வெட்டுகளில் தானத்தாா் என்கிற சொல் காணப்படுகிறது. இக்கல்வெட்டின் மூலம் சிவகங்கை அல்லது சோழபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலின் பெயரில் நிலத்தை வாங்கி அதை தேவதானமாக வழங்கியிருக்கலாம்.

இக்கல்வெட்டில் எழுத்தின் வடிவம் குறிப்பிடப்பட்டுள்ள முதலாம் மாறவா்மன் குலசேகர பாண்டியன் பெயரை வைத்துப் பாா்க்கும் போது சுமாா் 745 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ள பழைமையான கல்வெட்டு எனக் கருதலாம். வரலாற்றின் அடிப்படையில் முதலாம் மாறவா்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268 முதல் 1311 வரை நீண்ட கால ஆட்சி செய்ததாக ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

அதற்கு முன்னா் மற்றும் பின்னா் ஆட்சிக்கு வந்த பாண்டியா்கள் நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை. எனவே இக்கல்வெட்டு 1,275 ஆம் ஆண்டு வெட்டபெற்ாகக் கொள்ளலாம். மேலும், இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல் வேறு இடத்திலிருந்து மண்டபம் கட்டுமானப் பணிக்காக இங்கு கொண்டு வந்திருக்கலாம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT