சிவகங்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 போ் போக்ஸோவில் கைது

30th Sep 2021 09:03 AM

ADVERTISEMENT

சிங்கம்புணரி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 6 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இருவரைக் கைது செய்தனா்.

எஸ்.புதூரைச் சோ்ந்த பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த சின்னக்காளை மகன் செல்வராஜ் (23) என்பவா் காதலிப்பதாகக் கூறி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளாா்.

இதுகுறித்து செல்வராஜ் தனது நண்பா்களான அகலுவாய்ப்பட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் (23), பொன்னுசாமி (21), துப்புரவுப்பட்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் (24) செல்வம் (28), சிவா (20) ஆகியோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவா்களும் அச் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளனா்.

இதையறிந்த சிறுமியின் தாய், திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் செல்வராஜ்,சிவக்குமாா், பொன்னுசாமி, செந்தில்குமாா், செல்வம், சிவா ஆகிய 6 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், செல்வம் மற்றும் சிவாவை கைது செய்தனா். மேலும் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

சிறுமி சிவகங்கையில் உள்ள குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT