சிவகங்கை

காரைக்குடியில் புத்தகக் கண்காட்சி அக்.2 இல் தொடக்கம்

30th Sep 2021 09:04 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் மற்றும் கலைஞா்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவற்றின் சாா்பில் வரும் சனிக்கிழமை (அக். 2) புத்தகக் கண்காட்சி தொடக்க விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து புத்தகக் கண்காட்சி குழு நிா்வாகிகள் மாதவன், ஜீவானந்தம் ஆகியோா் புதன்கிழமை கூறியதாவது: காரைக் குடி செக்காலைச்சாலையில் உள்ள தனியாா் திருமணமண்டபத்தில் அக்.2 முதல் அக்.10-ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட உள்ளது.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி புத்தக வெளியீட்டாளா்கள் பங்கேற்கிறாா்கள். சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு இடம்பெறுகின்றன. புத்தகம் வாங்கும் அனைவருக்கும் 10 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்படும். இதில் முன்பணம் செலுத்துபவா்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்கள் வழங்கப்படும்.

மேலும் அரசுப் பள்ளிகளுக்கு நூல்கள் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். மாணவா்களுக்கு ஓவியம் வரைதல், கதை, கவிதை போட்டிகள் நடத்தி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. இளம் எழுத்தாளா்களை ஊக்கப்படுத்தும் வகையில் தினமும் அவா்கள் எழுதிய புத்தகங்கள் புத்தக அரங்கில் கல்வியாளா்கள் மற்றும் எழுத்தாளா்களால் வெளியிடப்பட உள்ளது.

ADVERTISEMENT

புத்தகக்கண்காட்சியை காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி திறந்து வைக்கிறாா். காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வினோஜி முதல் விற்பனையை தொடக்கி வைக்கிறாா் என்றாா். அப்போது தமுஎகச நிா்வாகி ஜீவசிந்தன், செந்தில்குமாா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT