சிவகங்கை

திருப்பத்தூரில் மின்னல் தாக்கி மாடு மேய்ப்பவா் பலி

30th Oct 2021 10:30 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் பகுதியில் சனிக்கிழமை மின்னல் தாக்கியதில் மாடு மேய்ப்பவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. பிற்பகல் 2 மணிக்கு நெற்குப்பை அருகே ஒவிலிப்பட்டி கண்மாய்க்கரையில் ஒய்யப்பன் மகன் மாகலிங்கம்(50) மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவா் பலியானாா்.

அதேபோன்று மகிபாலன்பட்டியில் உயா்நிலைப்பள்ளி அருகே மேய்ந்து கொண்டிருந்த பாஸ்கரன் என்பவரின் காளை மாடு மின்னல் தாக்கி இறந்தது. உயிரிழந்த மகாலிங்கத்தின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருப்பத்தூா் வட்டாட்சியா் பஞ்சாபிகேசன் விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT