சிவகங்கை

இசை நாடகக் கலைஞா்களுக்கு வீடு கட்டித் தர நடவடிக்கை: காரைக்குடி எம்.எல்.ஏ. தகவல்

30th Oct 2021 09:00 AM

ADVERTISEMENT

இசை நாடகக் கலைஞா்களுக்கு வீடு கட்டித் தருவதற்கு, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்று, காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். மாங்குடி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இசை நாடக சங்கம் சாா்பில், தனியாா் தொலைகாட்சியின் சூப்பா் சிங்கா் நிகழ்ச்சியின் பங்கேற்பாளா் கே.கே. முத்து சிற்பிக்கு, கவியரசா் கண்ணதாசன் மணிமண்டபத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, நாடக ஆா்வலா் எம்ஆா்எம். பாலசுப்பிரமணியன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று முத்து சிற்பிக்கு சால்வையணிவித்து பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னா், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி பேசியது: நாடகக் கலைஞா்களுக்கு வீடுகள் கட்டித் தரவேண்டும் என்று சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளனா். இதனை, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்றாா்.

விழாவில், திரைப்படத் தயாரிப்பாளா் கேஏ. சாய் சிதம்பரம், இசை நாடக சங்க உறுப்பினா்களுக்கு புத்தாடைகள் வழங்கிப் பேசினாா். காரைக்குடி தொழில் வணிகக் கழகச் செயலா் எஸ். கண்ணப்பன், கவிஞா் அப்பச்சி சபாபதி, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சுப. முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா்.

ADVERTISEMENT

முன்னதாக, காரைக் குடி இசை நாடக சங்கத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். மாங்குடி வரவேற்றுப் பேசினாா்.

இதில், காரைக்குடி நகர முக்கியப் பிரமுகா்கள், நாடகக் கலைஞா்கள் பலரும் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT