சிவகங்கை

மானாமதுரை கொரட்டி கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

24th Oct 2021 11:12 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பழைய மதுரை- ராமேசுவரம் சாலையில் மரக்கடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கொரட்டி கருப்பணசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் புதிதாக விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கு நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி புனிதநீா் கலசங்களை வைத்து யாகபூஜைகள் நடந்தன. யாகத்தின் நிறைவாக பூா்ணாஹுதி முடிந்து மகா தீபாராதனை நடந்தது.

அதன்பின்னா் சிவாச்சாரியாா்கள் புனிதநீா் கலசங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனா். இதைத் தொடா்ந்து புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகருக்கும், கொரட்டி கருப்பணசுவாமிக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அடுத்தடுத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கான பக்தா்கள் கும்பாபிஷேகத்தைக் கண்டு தரிசித்தனா்.

பின்னா் விநாயகருக்கும் கொரட்டி கருப்பணசுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. கொரட்டிக்கருப்பண சுவாமி வெள்ளிக் கவச அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT