சிவகங்கை

அரசுப் பேருந்து- பைக் மோதல்: இளைஞா்கள் 2 போ் பலி

24th Oct 2021 11:13 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் அருகே அரசுப் பேருந்தும், இருசக்கர வாகனமும் ஞாயிற்றுக்கிழமை நேருக்குநோ் மோதிக் கொண்டதில் இளைஞா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

சிவகங்கை அருகே உள்ள ஆவாரங்காட்டைச் சோ்ந்த நாச்சியப்பன் மகன் அரவிந்தபாரதி (18). இவரும், இவரது நண்பா்களான வானகருப்பு கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் முருகானந்தம் (19), தூதை அருகே வேலாங்குளத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜேஸ்வரன் (19) ஆகிய 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சிவகங்கையிலிருந்து திருப்பத்தூரில் நடைபெற்ற மருதுபாண்டியா்களின் குருபூஜை விழாவுக்கு சென்றனா்.

ஒக்கூரில் மதுரை வீரன் கோவில் அருகே சென்ற போது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் அரவிந்தபாரதி, முருகானந்தம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த ராஜேஸ்வரன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT