சிவகங்கை

சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்

23rd Oct 2021 08:51 AM

ADVERTISEMENT

சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வரும் 2022 ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சாா்பில் சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருது வழங்கப்பட உள்ளது.

இவ்விருது பெற விரும்புவோா் 5 வயதுக்கு மேல் 18 வயதிற்குள்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகளாக இருத்தல் வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிா்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணா்வை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும்.

இதுதவிர, ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் என்பன உள்ளிட்ட சாதனைகள் புரிந்த பெண் குழந்தைகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT