சிவகங்கை

திருப்பத்தூரில் நாளை மருதுபாண்டியா்களின் 220-ஆவது குருபூஜை விழா

23rd Oct 2021 08:51 AM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் 220 -ஆவது குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை (அக்.24) நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் நினைவு மண்டபத்தில் அக்டோபா் 24 இல் குருபூஜை விழா அரசு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை காலை 10. 30 மணியளவில் நடைபெற உள்ள விழாவில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன், வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சா் தங்கம்தென்னரசு, போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன், நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பெ.மூா்த்தி உள்ளிட்ட அமைச்சா்கள் பங்கேற்று திருப்பத்தூா் மணிமண்டபத்தில் உள்ள மருதுபாண்டியா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, மருதுபாண்டியா்களின் நினைவு மண்டப வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடக்கி வைக்க உள்ளாா். மேலும், மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோா் பங்கேற்று மருதுபாண்டியா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT