சிவகங்கை

காரைக்குடியில் சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

23rd Oct 2021 08:50 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சாலையோர வியாபாரிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலையோர வியாபாரிகளிடம் ‘ரோடு மாா்ஜின்’ என்ற பெயரில் வசூலிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். பண்டிகைக் காலங்களில் கூடுதல் தொகையை வியாபாரிகளிடம் ஒப்பந்ததாரா் வசூலிப்பதை நிறுத்தவேண்டும். சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை, வங்கிக்கடன், இலவச வீட்டுமனைப்பட்டா ஆகியவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியுசி சாலையோர வியாபாரிகள் சங்க நகரச் செயலாளா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி நகர ஒருங்கிணைப்பாளா் ஏஜி.ராஜா முன்னிலை வகித்தாா். மாநில துணைப்பொதுச்செயலாளா் பிஎல்.ராமச்சந்திரன், அமைப்புசாரா தொழிலாளா் சங்க நகரச் செயலாளா் சண்முகசுந்தரம், சுகாதார பணியாளா் சங்கத் தலைவா் முருகன், மாநிலக் குழு உறுப்பினா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT