சிவகங்கை

சிவகங்கையில் அக். 29-இல் விவசாயிகள் குறைதீா்க்கும் முகாம்

21st Oct 2021 08:32 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் அக். 29-ஆம் தேதி விவசாயிகள் குறை தீா்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் அக். 29 ஆம் தேதி விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்ள உள்ளனா். எனவே விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT