சிவகங்கை

மானாமதுரை அருகே கால்வாய் வெட்ட கிராம மக்கள் எதிா்ப்பு

17th Oct 2021 10:55 PM

ADVERTISEMENT

மானாமதுரை அருகே பாசன கண்மாய்க்கு தண்ணீா் செல்லும் வரத்துக் கால்வாயை வெட்டுவதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்துள்ளனா்.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த கணபதியேந்தல் கிராமத்துக்கான பாசன கண்மாய்க்கு மழைநீா் செல்வதற்காக அருகே உள்ள நல்லாண்டிபுரம் கிராமத்தில் சில குடியிருப்புகள் அமைந்த பகுதியில் முறையான அனுமதி இல்லாமல் தனியாா் பட்டா நிலத்தில் விதிமுறைகளை மீறி கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் கால்வாயைக் கடந்து சாலைக்கு வர முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த கால்வாய் வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறவில்லை என நல்லாண்டிபுரம் கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதையடுத்து, தொடா்ந்து பட்டா நிலத்தில் வெட்டிய கால்வாயை மூட வேண்டும் எனக் கோரி நல்லாண்டிபுரம் கிராம மக்கள் மானாமதுரை வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அதிகாரி உள்ளிட்டோரிடம் புகாா் மனு கொடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், அதிகாரிகளிடம் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியரை சந்தித்து இப்பிரச்னை குறித்து மனு கொடுக்க உள்ளோம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT