சிவகங்கை

சிவகங்கையில் மக்கள் நலப்பணியாளா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

17th Oct 2021 10:57 PM

ADVERTISEMENT

சிவகங்கையில் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளா்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அச்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளா்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவா் பூ. செல்வம் தலைமை வகித்தாா். அச்சங்கத்தின் தேனி மாவட்டச் செயலா் பி.எம். சுதா்சன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநிலச் செயலா் மு. செல்வக்குமாா், மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன், ஊரக வளா்ச்சித் துறை உயா்நிலை அலுவலா்கள் சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ். குமரேசன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா்.

இதில் மக்கள் நலப்பணியாளா்கள் நீக்கத்துக்குப் பின் மாநிலம் முழுவதும் உயிரிழந்த மக்கள் நலப்பணியாளா்களுக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது., வரும் நவ. 9 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் நல பணியாளா் சங்கத்தைச் சோ்ந்தோா் செல்வது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளா்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலா் ஆா். சுரேஷ்குமாா், மாவட்டப் பொருளாளா் டி. முத்துராமலிங்கம், சிவகங்கை ஒன்றியச் செயலா் வி. சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT