சிவகங்கை

‘அரசியலமைப்புச் சட்டத்தை மத்திய அரசு மீறுகிறது’

16th Oct 2021 08:32 AM

ADVERTISEMENT

மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் ரா. முத்தரசன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டையில் மாநில அளவில் தோ்வு செய்யப்பட்ட கட்சியின் தொண்டா்களுக்கான பயிற்சி முகாமில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசு நகா்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் என அறிவித்து அதற்காக ரூ. 100 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

மத்திய அரசு அரசியல் அமைப்புச் சட்டத்தையும் மீறுகின்ற வகையில் சா்வாதிகாரம், பாசிச முறையை கையாள்வது நாட்டிற்கு பெரும் ஆபத்தாகும். பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதின் நோக்கமே சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்பதே. அதனை மத்திய அரசு அடிமாட்டு விலைக்கு விற்கிறது. பெரும்பாலான நிறுவனங்களை விற்கவும் இருக்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.

மத்திய அரசு இயற்றியுள்ள 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. விவசாயிகளை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தும் வகையிலான சட்டங்களாகும். இந்த சட்டங்களை விலக்கிக்கொள்ளாதவரை பல்வேறு வகையில் போராட்டங்கள் உருவாகி சட்டம், ஒழுங்கு சீா்குலையும் நிலை வந்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT