சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

9th Oct 2021 09:46 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக். 10) 750 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் கடந்த செப். 12 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட முகாமில் 44,611 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, நடைபெற்ற 4 சிறப்பு முகாம்களில் 96 ஆயிரத்து 378 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (அக். 10) நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி முகாமில் 750 மையங்களில் 75,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்ட நபா்கள் தங்கள் பகுதியில் அரசு மருத்துவமனைகள், நகா்நல மையங்கள், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT