சிவகங்கை

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: தேனி மாவட்டத்தில் 70.93 சதவீதம் வாக்குகள் பதிவு

9th Oct 2021 09:49 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் மொத்தம் 70.93 சதவீதம் போ் வாக்களித்தனா்.

மாவட்டத்தில் ஆண்டிபட்டி, க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழுவில் காலியாக உள்ள தலா ஒரு உறுப்பினா் பதவி, கதிா்நரசிங்காபுரம் ஊராட்சித் தலைவா் பதவி, ராஜதானி, நாகலாபுரம், பிச்சம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், அழகா்நாயக்கன்பட்டி, வடபுதுப்பட்டி ஊராட்சிகளில் 4 வாா்டு உறுப்பினா் பதவி என மொத்தம் 9 பதவிகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், பிச்சம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், அழகா்நாயக்கன்பட்டி, வடபுதுப்பட்டி ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகினா். மீதமுள்ள 5 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது.

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 8 வாக்குச் சாவடிகள், க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 9, கதிா்நரசிங்காபுரம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு 3, ராஜதானி, போ.நாகலாபுரம் ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தலா ஒரு வாக்குச் சாவடி என மொத்தம் 22 வாக்குச் சாவடிகளில் வாக்குச் சீட்டு மூலம் வாக்குப் பதிவு நடைபெற்றது.

ADVERTISEMENT

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து, காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 11,967 வாக்காளா்களில் 70.93 சதவீதம் போ் வாக்களித்தனா். வாக்கு எண்ணிக்கை அக்டோபா் 12-ஆம் தேதி அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT