சிவகங்கை

இளையான்குடி கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

3rd Oct 2021 11:16 PM

ADVERTISEMENT

இளையான்குடி, டாக்டா் சாகிா் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பாக ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அப்பாஸ் மந்திரி தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். நிகழ்ச்சியில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் அஸ்மத்து பாத்திமா, பீா் முஹம்மது, அப்ரோஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT