சிவகங்கை

மானாமதுரையில் புதிய அரசு பேருந்து சேவை தொடக்கம்

3rd Oct 2021 02:06 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் புதிய அரசு பேருந்து சேவைகள் மற்றும் பேருந்து நிறுத்தம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மங்கலத்துக்கு புதிய அரசு பேருந்து சேவையும், மானாமதுரை ஒன்றியம் கீழப்பசலை கிராமத்திலிருந்து மானாமதுரை வழியாக சிவகங்கைக்கு அரசு நகா்ப் பேருந்து சேவையும் தொடங்கப்பட்டது.

இத் தொடக்க விழாவில், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி ஆ. தமிழரசி கலந்துகொண்டு, புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, மானாமதுரையில் மதுரை- ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே புதிய பேருந்து நிறுத்தத்தையும் ஆ. தமிழரசி திறந்துவைத்துப் பேசினாா்.

இவ்விழாக்களில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, மானாமதுரை கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ராஜாமணி, முன்னாள் கவுன்சிலா் முனியசாமி மற்றும் ஆட்டோ சங்க நிா்வாகிகள், திமுக நிா்வாகிகள், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT